Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருப்பது போல் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இரண்டு ஆவணங்களும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் 12 இலக்க எண்ணை அனைத்து விதமான கணக்குகளில் இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒரே நாடு ஒரே கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டையை ஆதாருடன் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் இணைப்பது குறித்த முழு விபரமும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ செல்ல வேண்டும்.அதில் start now என்பதை க்ளிக் செய்யவும். உங்களது முகவரி மற்றும் போன் நம்பரை கொடுத்து ரேஷன் கார்டு பெனிஃபிட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

Categories

Tech |