பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் முக்கிய ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். அந்த அடிப்படையில் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர் பெயர் நீக்குதல் அல்லது சேர்த்தல் எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் வழிமுறைகள்
ஒரு இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்கள் மலிவான விலையில் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர் பெயரை நீக்குவது (அ) சேர்த்தல் போன்ற முறைகளை ஆன்லைன் மூலம் ஈஸியாக செய்யலாம்.
# அதாவது முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது பயனாளர் நுழைவு என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# அதன் பின்பு ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். அடுத்து, கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து “பதிவு செய்” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# பதிவு செய்ததும் உங்களின் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த OTP எண்ணை உள்ளீடு செய்து பதிவு செய் என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர் அல்லது சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் இருக்கிறதா ஆகிய விபரங்கள் இப்போது காண்பிக்கப்படும்.
# பெயர் நீக்கம் செய்யும் இடது புறத்தில் “அட்டை பிறழ்வுகள்” என்ற தேர்வை க்ளிக் செய்ய வேண்டும். பின் “புதிய கோரிக்கை” என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# இதனைத்தொடர்ந்து குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு “சேவையை தேர்வு செய்ய வேண்டும்” என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# இந்த நிலையில் சேவை தேர்வுகளில் “குடும்ப உறுப்பினர் நீக்க” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# குறிப்பிட்ட நபரை எதற்கு நீக்கம் செய்கிறீர்கள் காரணத்தைக் குறிப்பிடவும்.
# திருமணம், இறப்பு ஆகிய எந்த காரணத்துக்காக குடும்ப உறுப்பினர் பெயரை எதற்காக நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான “ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்” என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# அதன் பின்பு “உறுதிப்படுத்துதல்”என்பதை டிக் செய்து “பதிவு செய்” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
இந்த அடிப்படையில் 2-3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.