Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. 150 கிலோ அரிசி இலவசம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டை பயனர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, இனிமேல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பாக கோடிக் கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களானது வழங்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பால் சிரமப்படும் மக்கள் அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர்.

எனினும் இனிவரும் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதேசமயம் சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் 150 கிலோ வரையிலான அரிசி இலவசமாக கிடைக்கும். இதற்கென சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. அதன்படி இந்த அறிவிப்பை சத்தீஸ்கரின் பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்காக அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

ஆகவே இதனை பயன்படுத்திக்கொள்ள, நீங்கள் சத்தீஸ்கரில் வசிப்பவராக இருக்கவேண்டும். இதன் கீழ் 45-135 கிலோ வரையிலான அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இது தவிர்த்து மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 -150 கிலோ வரை விநியோகம் செய்யப்படவுள்ளது.

Categories

Tech |