Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…! மாதத்தில் இரண்டு முறை…. வெளியான செம குட் நியூஸ்…!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்தில் இரு முறை உணவு தானியங்கள்  இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா  உச்சகட்டத்தில் இருக்கிறது. இதனால் பல மக்கள் பொருளாதார  வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் இந்தியாவின் கீழ் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் எனவும்,  வழக்கமாக கிடைக்கும் மானிய விலையுடன்  கிடைக்கும்  உணவு  தானியத்துடன்,  ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டநிலையில்  உத்திரப்பிரதேச மாநில யோகி அரசு ஹோலி  வரை இந்த சிறப்புரை ரேஷன்  வினியோகத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 2 முறை உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் அதில் எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Categories

Tech |