Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. ஜனவரி 31 வரை அவகாசம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான காலக்கெடுவை அரசாங்கம் தற்போது நீட்டித்துள்ளது. அதாவது மேற்கு வங்க மாநில உணவு மற்றும் வழங்கல் துறை, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை கொடுத்து இருந்தது.

இதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வந்தது. ஆனால் இதுவரை 25 % பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்கவில்லை என்பதால் இந்த காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கார்டுகளுடன் ஆதார் இணைப்பு சேவையை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த ரேஷன் கார்டுகளுடன் ஆதார் இணைப்பு என்பது உண்மையான பயனாளிகள் ரேஷன் பொருட்களில் அவருக்கு உரிய பங்கைப் பெறாமல் உள்ளதை உறுதி செய்வதை கண்டறிய உதவுகிறது.

தற்போது இந்த செயல்முறையை கண்காணித்து, நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை முடிக்க வேண்டும் என ரேஷன் கடைகளின் பகுதி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையில் ரேஷன் அட்டைதாரர்கள் தனது வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க விரும்பினால், wb.gov.in என்ற இணையதளம், வாட்ஸ்அப் அல்லது ‘அமர் ரேஷன்’ என்ற மொபைல் செயலி மூலமாக சேவைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |