நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது.அதனால் ஆதார் அட்டையை ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட மற்ற ஆவணங்களுடன் இணைத்திருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை போலீஸ் ஸ்டேஷன் காடுகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 13,400 பேர் மற்ற மாநில ரேஷன் கார்டுகளிலும் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் முக்கிய ஆவணம் இல்லாதவர்களின் பெயர்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதனைப் போலவே ஆதார் அட்டையுடன் தங்கள் ரேஷன் கார்டுகளை இணைக்காத 60,000 பேர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனையும் மீறி ஆதார் இணைக்காதவர்களின் பெயர்கள் குடிமை பொருள் வழங்கல் துறையின் ரேஷன் அட்டையிலிருந்து நீக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.