Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டுக்கான புது அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்கீழ் அந்தியோதயா மற்றும் தகுதியான வீட்டு ரேஷன் அட்டைதாரர்களின் வெர்பிகேஷன் 30 தினங்களுக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெர்பிகேஷனின் போது தகுதி இல்லாத பயனாளர்களின் ரேஷன்அட்டை ரத்து செய்யப்படும். உத்திரபிரதேச உணவு மற்றும் வழங்கல் ஆணையர் மார்க்டே ஷாஹி அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக கூடுதல் உணவு ஆணையர் அனில்குமார் துபே கூறியதாவது, பயனாளிகள் அளிக்கும் தனிப்பட்ட தகவல்கள் அவ்வப்போது மாறுகிறது. இந்த நிலையில் ரேஷன்அட்டைகளில் தகுதியில்லாத யூனிட்கள் இடம்பெறுவது தொடர்பாக அடிக்கடி புகார் எழுகிறது. தகுதியற்ற அட்டைதாரர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச்சட்டம் 2013ன் கீழ் இப்பிரச்சாரம் நடத்தப்படுகிறது. தகுதியில்லாத பயனாளர்களுக்கு பதில், தகுதி இருப்பவர்களுக்கு ரேஷன்அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தகுதி இல்லாதவர்களை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி, தகுதி இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே இது போன்ற பிரச்சாரங்களை நடத்துவதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

இதன் கீழ் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, வசிக்கும் இடம் ஆகிய விபரங்களை சேகரித்து ஒரு தரவுத் தளம் தயாரிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அட்டை வைத்திருப்பவர்களின் இறப்பு (அல்லது) சிறந்த நிதிநிலை போன்றவற்றின் அடிப்படையில் அட்டை வைத்திருப்பவர் தகுதியற்றவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் ரேஷன்அட்டைகளை வெர்பிகேஷன் செய்யும் பணியினை அரசானது துவங்கியுள்ளது. சென்ற 2017-2021ம் ஆண்டு வரை நாட்டில் நகல், தகுதியில்லாத மற்றும் போலியான என 2 கோடியே 41 லட்சம் ரேஷன்கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கடந்த நாட்களில் அரசு தெரிவித்து உள்ளது. இவற்றில் அதிகபட்சம் உத்திரபிரதேசத்தில் 1.42கோடி கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |