நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக நலத்திட்ட உதவிகளும்,மலிவு விலையில் உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் அட்டைகள் உள்ளது. மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தை செயல்படுத்த மக்கள் அனைவரும் தங்கள் ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். அப்படி செய்யாவிட்டால் பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும். ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைப்பது அவசியம்.
ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைப்பது எப்படி?
முதலில் ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் ஸ்டார்ட் நவ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்களுடைய முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பிறகு ரேஷன் கார்டு பெனிபிட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்களது ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும். அதனை நிரப்பிய உடன் உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியை பெறுவீர்கள்.
அதன் பிறகு உங்களது ஆதார் சரிபார்க்கப்பட்டு ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்படும்.