Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இனி இது எல்லாம் கிடைக்கும்…. மத்திய அரசு வெளியிட்டு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தில்   டேக்  ஹோம் ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற  கூட்டத்தில் நமது இந்தியாவில் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்பட இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரித்  இராணி கூறியதாவது, ” இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானிய விலையில் தானியங்கள், திணை ஆகியவற்றை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் டேக் ஹோம் ரேஷன் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் அங்கன்வாடிகளில் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், 6  வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு  திணை தானியங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 ஆகிய வழிமுறைகளின் அடிப்படையில் வாரம் ஒரு முறை டேக்    ஹோம் ரேஷன் திட்டத்துக்கும் அங்கன்வாடிக்கும் தானியங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். இந்நிலையில் அமைச்சகத்தின் வழிமுறைகள் படி டேக் ஹோம் ரேஷன் என்பது சாதாரண ரேஷன்  திட்டம் கிடையாது. உள்ளூர்களிலே கிடைக்கும் திணை, பருப்பு வகைகள், விதைகள், எண்ணெய்  வித்துக்கள் ஆகியவற்றுடன் சேர்த்து வரையறுக்கப்பட்ட வரம்புக்கு மேல் சர்க்கரை இல்லாமல் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் ஊட்டச்சத்து அளவுகளை பரிசோதிக்க உணவு தரநிலைகள் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை கூடகங்களில் பரிசோதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |