நியாய விலை கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மலிவான விரையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி போன்றவைகள் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான கால அவகாசம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க 3 மாதங்களுக்கு மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்தது. இந்நிலையில் கொரோனா காலத்தை முன்னிட்டு உத்திரபிரதேச மாநிலத்திலும் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இங்கு திடீரென கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் 5 கிலோ அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சூழலில் வருகிற அக்டோபர் மாதத்திற்கு பிறகு இலவச அரிசியும் வழங்கப்பட மாட்டாது என தற்போது கூறப்பட்டுள்ளது.