இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரேஷன் கார்டு திட்டங்களில் பல்வேறு விதிமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கார்டு விதிமுறைகள் சில மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய அறிவிப்புகளின் படி ரேஷன் கார்டு தாரர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்காலத்தில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசுக்கு செலவினத்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இலவச ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகின்றது. செப்டம்பர் மாதத்தில் இருந்து ரேஷன் கார்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படாது எனவும், அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.