Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உணவு வழங்கல் துறையின் மூலமாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த குடும்ப அட்டைகளை பெற www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பித்த பிறகு அதைப் பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், புதிய அட்டைக்கு ஒப்புதல் வழங்குபவர்கள் போன்றவர்கள் ஆய்வு செய்து அச்சிடப்பட்ட அட்டையை உரிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பர்.

அதன்பிறகு குடும்ப அட்டையானது பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்நிலையில் குடும்ப அட்டையை அலுவலகங்களில் வழங்குவதற்கு தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக குடும்ப அட்டையை தபால் மூலமாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான திட்டத்தை உணவு வழங்கல் துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே தபால் மூலமாக குடும்ப அட்டையை பெற விரும்புவர்கள்  இணையதளத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 45 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்தினால் குடும்ப அட்டையானது தபால் மூலமாக வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும்.

Categories

Tech |