Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… கேஸ் சிலிண்டருடன் இணைப்பது கட்டாயம்…. ஜூன் 30 கடைசி நாள்…!!!!!!

நாட்டுமக்கள் அனைவருக்கும் மதிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும்.

இந்த நிலையில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு சமீபத்தில் அறிவித்தது. முதல்வர் புஷ்கர் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உத்தரகாண்ட் அரசு இந்த முடிவை அமல்படுத்தி வருகின்றது. மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற அந்தியோதயாரேஷன் கார்டுதாரர்கள் எரிவாயு இணைப்பு அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க வேண்டும் என உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த இணைப்பிற்கு பின் இலவச சிலிண்டர் திட்டத்தின் பலனை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் உத்தரகாண்ட் அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை மாதத்திற்கு முன் ரேஷன் கார்டை  இணைக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் மாவட்ட வாரியாக அந்தியோதயா நுகர்வோர் பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இத்துடன் அந்தியோதயா கார்டுதாரர்களின் ரேஷன் கார்டை கேஸ் இணைப்புடன் இணைக்க வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசின் இந்த முடிவிற்கு பின் அந்த மாநிலத்தில் உள்ள சுமார் 2 லட்சம் அந்த்யோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.

Categories

Tech |