நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. PHH, NPHH உள்ளிட்ட பலதரப்பட்ட ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் எந்த ஒரு மாநிலத்தில் இருந்தாலும் அங்குள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
இந்நிலையில் தற்போது மொபைல் ஆப் மூலமாக எளிமையாக ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் அட்டை தாரர்களின் வசதிக்காக மேரா ரேசன் ஆப் என்கின்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளின் முழு விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் எந்த பொருட்கள் எவ்வளவு விலை என்பதற்கான விவரங்களை எளிதில் அறியலாம்.