ரேஷன் கடைகளில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் தற்போது பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கணினி பயன்பாடு உள்ளது. இது தவிர குடும்ப அட்டைகளுக்கு எல்லா பொருட்களும் பாதிப்பின்றி கிடைக்க கடைகளில் பாயின்ட் ஆப் சேல்’ விற்பனை முனைய இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டை, குடும்ப அங்கத்தினர், ஆதார் விவரங்கள், கைபேசி எண் போன்றவை அந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ரேஷனில் பொருட்கள் வாங்கும்போது இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் உடனடியாக இதில் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்துவிடுகிறது. ஆனால் பல தொகுதிகளில் பொருட்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளின் வட்டார வழங்கல் அலுவலர் அல்லது உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முகவூர் கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை பாலியல் தொந்தரவு செய்வதாகவும், பணியாளர்களின் மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட்டு மார்ச் 30ஆம் தேதியன்று தங்கதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலில் ஈடுபடுதல் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தால் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் 98840 00845 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் எந்தவித நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.