வேலூர் மாவட்டத்தில் 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பின்புறம் நேற்று காலை முதலே அரிசி மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று நிற்பதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது தமிழ்நாடு அரசின் ரேஷன் அரிசியுடன் லாரி ஒன்று நிற்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுபற்றி வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் திண்டிவனம் பதிவு எண் கொண்ட அந்த லாரியில் சட்டவிரோதமாக சுமார் 22 டன் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்து இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகள் உடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் இடங்கள் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார்? இவ்வளவு ரேஷன் அரிசி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி இந்த பகுதிக்கு அருகில் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 30 ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரயில், இருசக்கர வாகனம், லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.