Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம்…. மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தமிழக அரசு…..!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற ரேஷன் பொருள்களும்,  இலவச சேலை, வேட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கட்டாயம் வழங்கப்படும். ஆனால் பணம் கொடுக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்த அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிடுகின்றது. கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த பொங்கலுக்கும் பணம் கொடுக்கப்படும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் பணம் கிடையாது என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |