Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மே 31-ஆம் தேதி வரை…. சூப்பர் தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்புசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாலும், கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.

தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து டெல்லி அரசாங்கம் ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. 72.77 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறுகின்றனர். மேலும் புலம்பெயர்ந்த மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது, இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 கிலோ கோதுமையும், 1 கிலோ அரிசியும் இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |