புதுவை அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் மழை நிவாரண தொகையாக பொதுமக்கள் வங்கி கணக்குகளில் வழங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தற்போது குடிமைப் பொருள் வழங்கல் துறை முடக்கியுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 2 மாதமாக முற்றிலும் முடங்கியது. மேலும் வீடுகள், விவசாய பொருட்கள் சாலைகள் உட்பட 300 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் காரணத்தினால் புதுச்சேரி முதல்வர் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தப் பணியை குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆரம்பித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் மொத்தம் 3.65 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டால் 182.5 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்படுகிறது.
மேலும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் குடிமைப்பொருள் வழங்கல் துறை மட்டுமல்லாமல் வேளாண்மை மீன்வளத்துறை உட்பட சில துறைகளில் பங்களிப்புடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மழை நிவாரண தொகை வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக நிதித்துறையிடம் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர், அடுத்த வாரத்திற்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5,000 ரூபாய் மழை நிவாரண தொகையாக வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புதுவை அரசு தெரிவித்துள்ளது.