குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது, நியாயவிலைகடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
14 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைதாரருக்கு வங்கி கணக்கு இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டுமென்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு பதிலாக புதிய சுற்றறிக்கையை உணவுத்துறை சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கு பக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கி யினுடைய விண்ணப்பத்தை அவர்கள் நியாய விலை கடையில் பெற்றுக் கொள்ளுமாறும் அதே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கி கணக்கு உள்ளது என்றால் அந்த வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்திருப்பார்கள். அந்த தகவலை மட்டும் கூட்டுறவு வங்கிகளிளோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலேயே புதிய கணக்கை தொடங்கி அதை ஆதாருடன் இணைத்து அந்த விவரங்களை மட்டும் நியாயவிலை கடை ஊழியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நேரடியாக நியாய விலை கடை பணியாளர்களோ அல்லது யாரும் குடும்ப அட்டைதாரர்கள் உடைய ஆதார் எண் விவரங்களை பெறக் கூடாது அல்லது ஆதார் நகலை பெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் இணைக்கப்பட்ட தகவலை மட்டும் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.