நவம்பர் கடைசி வாரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொண்டை கடலை வழங்கும் நடவடிக்கைகளை நுகர்பொருள் வாணிப கழகம் தொடங்கியுள்ளது.
மத்திய தொகுப்பில் இருந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக, ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு தலா ஒரு கிலோ வீதம், கொண்டைகடலை வழங்க உத்தரவிடப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட கொண்டை கடலை, மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் டிசம்பர் மாதத்திற்குள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளனர். நவ.,21 முதல் மண்டல கிடங்குகளில் இருந்து சில்லறை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பர். வரும் வாரம் முதல் இவை ரேஷனில் கிடைக்கும்.