தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு முன்பெல்லாம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இனி இணையத்தின் வழியாக சுலபமாக செய்து முடிக்கலாம். வீட்டிலிருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதலுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, பயனாளர் நுழைவு என்பதை க்ளிக் செய்து ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும்.
பிறகு கேப்ட்சா எண்ணைக் கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, பதிவு செய் என்பதை க்ளிக் செய்து ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து, பதிவு செய் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது அனைத்தும் விபரங்களும் திரையில் தெரியும். பின்பு பெயர் நீக்கம் என்ற தேர்வை க்ளிக் செய்யவும் புதிய கோரிக்கை என்பதை க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். பிறகு 2-3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் ஆகிவிடும். அதனை, அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.