பிரான்சின் தலைநகரான பாரீஸில் காவல்துறையினர் போதைப்பொருள் என்று நினைத்து இனிப்பு பொடிகளை கைப்பற்றியுள்ளனர்.
பிரான்சின் தலைநகரான பாரீஸில் ஹரிபோ என்னும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் இனிப்பு மிட்டாய்கள் செய்வதற்கு பெயர் பெற்றது. இந்நிலையில் ஹரிபோ நிறுவனதார் இனிப்பு மிட்டாய்கள் தயார் செய்வதற்காக ஸ்ட்ராபெர்ரி பழங்களை பொடி செய்து வைத்துள்ளனர். அச்சமயம் பாரீஸில் போதைப்பொருள்களை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே ஹரிபோ நிறுவனம் தயாரித்து வைத்திருந்த இனிப்பு பொடிகளை பார்த்த காவல்துறையினர் சுமார் ரூ. 8,61,70,492 மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றி விட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்துள்ளனர். அதன் பின்னர் தான் அவர்களுக்கு இது போதை பொருள் அல்ல, மிட்டாய்கள் செய்வதற்காக வைத்திருந்த இனிப்பு பவுடர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கைப்பற்றிய இனிப்பு பொடியை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.