2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அரசியல் வட்டாரங்களில் அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கு எதிராக போட்டியிடப் போகும் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகாரில், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு இருக்கிறதா ? திருச்சி முதல் செங்கல்பட்டு வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு முதலில் ரூபாய் 25 கோடியாக இருந்த டெண்டர் மதிப்பு, திடீரென ரூபாய் 900 கோடியாக உயர்ந்தது எப்படி? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.