Categories
அரசியல்

ரூ8,000 கோடியில் விமானம்….. மக்கள் வரிப்பணத்தில் சொகுசு காணும் ஏழை தாயின் மகன்….. காங்கிரஸ் MP விமர்சனம்…!!

பிரதமர் மோடி பயணத்திற்காக புதிதாக விமானம் வாங்கியது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளவு கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சூழ்நிலை ஒருபுறமிருக்க, பலரோ அத்தியாவசியமான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்காக ரூபாய் 8000 கோடி செலவில் புது விமானம் வாங்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி பயணம் செய்வதற்காக புதிதாக வாங்கப்பட்ட சொகுசு விமானம் குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் செலவில் பொது மக்கள் வரிப்பணத்திலிருந்து தனி விமானம் வாங்கி இருக்கிறார் என ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |