Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ10,00,00,000 கட்டியாச்சு…. ஜனவரி ரிலீஸ்…? அந்த 4 பேருக்கு சசிகலா மனமார்ந்த நன்றி…!!

தனக்காக அபராத தொகை செலுத்திய 4 பேருக்கு தனது வழக்கறிஞர்  மூலமாக சசிகலா நன்றி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அவர்களுக்கு ருபாய் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத பணத்தை தண்டனை காலம் முடிவடையும் நிலையில் கட்டினால், 2021 ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலை ஆவார் என்று சொல்லப்படுகிறது.

இதையொட்டி சசிகலாவுக்காக பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகியோர் அபராத தொகையை டிடியாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் நான்கு பேருக்கும் தனது வழக்கறிஞர் மூலமாக சசிகலா நன்றி தெரிவித்துள்ளார். 

Categories

Tech |