ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 10 ஆயிரம் கோடியாக உயரும் என அரசு மதிப்பிட்டுள்ளது.
சீனாவின் தோன்றிய கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சில நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்தது. இதனையடுத்து இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார்.
இந்நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ.9,500 கோடி முதல் 10 ஆயிரம் கோடியாக உயரும் என அரசு மதிப்பிட்டுள்ளது. அதனால் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் பங்கு விலக்கல் நடவடிக்கையையும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது இதற்கு காரணம்.