Categories
தேசிய செய்திகள்

ரூ.95 செலுத்தினால் போதும்…. ரூ.7 லட்சம் வருமானம் கொடுக்கும்…. அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!!

இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது .நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைக்க வேண்டும். இதற்கு வங்கிகளிலும் தபால் அலுவலகத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய தபால் துறையில் பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் கிராம் சுமங்கல் கிராமின் யோஜனா திட்டம். இந்த திட்டம் கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நல்ல திட்டம் ஆகும். இதில் 6 பிரிவுகளாக காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான வயது வரம்பு 19 வயது முதல் 45 வயது வரை ஆகும்.

இருபது வருடங்களில் ரூபாய் 7 லட்சம் காப்பீடு உங்களுக்கு கிடைக்க நீங்கள் மாதத்திற்கு 2853 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். அதாவது தினமும் ரூ.95 செலுத்த வேண்டும். 15 வருட பாலிசியில் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என்று 20% கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை 20 வருட பாலிசியை நீங்கள் தேர்வு செய்தால் 8, 12, 16 மாதங்களில் கிடைக்கும். உங்களுடைய 25வது வயதில் 20 வருடம் முதிர்வு கொண்ட பாலிசியை எடுத்தால் 20 வருடங்களில்  14 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும். ஒருவேளை இந்த திட்டத்தில் இணைந்த பாலிசிதாரர் அவருடைய முதிர்வு காலத்திற்கு முன்னரே இறந்துவிட்டால் அவருடைய நாமினிக்கு உதவித்தொகையும் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுவிடும்.

Categories

Tech |