சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுலா துறையை மேம்படுத்து வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக மதுரை மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா காலை 8:30 மணி அளவில் தொடங்கி இரவு 8:30 மணி அளவில் முடிவடையும். இதற்கான கட்டணம் ரூபாய் 900 ஆகும்.
இந்த பயணத்தின் போது அழகர் கோவில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் கோவில், விட்டநேரி முத்து மாரியம்மன் கோவில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் கோவில், வண்டியூர் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் திருக்கோவில் போன்றவற்றுக்கு சொல்லலாம். இந்த ஆன்மீக சுற்றுலாவானது மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் ரோட்டில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது. இதனையடுத்து சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மதிய உணவு, பிரசாதம், விரைவு தரிசனம் போன்றவைகளும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆன்மீக சுற்றுப் பயணத்திற்கு செல்ல விரும்புபவர்கள் www.ttdconline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25333444, 044-25333333, 9176995841 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்கலாம்.