Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில்…. நகராட்சி பசுமை பூங்கா…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!!

பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் சாலையில் ஏ.எஸ்.டி.சி காலனி அமைந்துள்ளது. இங்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது சுற்று சுவர் வசதியுடன், நடைபாதை வசதிகள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், செடிகள் போன்றவற்றுடன் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டார் மாது தலைமை தாங்கினார். இவர் பூமி பூஜை செய்வதற்கான பணிகளை தொடங்கினார். இந்த பூமி பூஜையானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் இதில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் தவமணி, நகர அமைப்பு அலுவலர் ஜெயவர்மன், கவுன்சிலர் ஜெகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நாட்டான் மாது, நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |