துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி டிக்கெட்டில் இந்தியர் ஒருவருக்கு 7 கோடி பணம் பரிசாக விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
மும்பையை சேர்ந்தவர் கணேஷ் சிண்டே, ஒரு கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது துபாய்க்கு சென்று வந்தபோது லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்துள்ளார். துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு டியூட்டி பிரீ லாட்டரி துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து மாதம் இருமுறை லாட்டரி சீட்டுகள் குழுக்கள் நடந்து 3 நபருக்கு பரிசு வழங்கி வருகின்றது.
அந்த வகையில் முதல் பரிசு 10 லட்சம் அமெரிக்க டாலர், இரண்டாவது பரிசு சொகுசு கார், மூன்றாவது பரிசு சூப்பர் பைக் என இதுவரை 363 முறை இந்த டியூட்டி பிரீ லாட்டரி பரிசு வழங்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் 363 முறையில் 181 முறை இந்தியர்களுக்கு பரிசு விழுந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவை சேர்ந்த ஒரு டிரைவருக்கு பரிசு விழுந்தது. இந்த முறை ஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்கிய கணேஷிற்கு முதல் பரிசான 10 லட்சம் அமெரிக்க டாலர் விழுந்துள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 7 கோடி ஆகும். இதை வைத்து அவர் சொந்த வீடு, கார் மற்றும் தனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.