ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர் . அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப்போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நான்காம் தங்கத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ஆறு கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அரசு வேலை வழங்க உள்ளதாக ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.
Categories
ரூ.6 கோடி ரொக்கப் பரிசு, அரசு வேலை… தங்கம் வென்றவருக்கு அள்ளி வழங்கும் ஒடிசா மாநிலம்…!!!
