அவதூறு கருத்து தெரிவித்தற்காக பாஜக தலைவர் அண்ணாமலை 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் BGR நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிராக முறைகேடு புகார்களை முன்வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அது BGR நிறுவனத்திற்கு மின்வாரியம் சில சலுகைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக BGR நிறுவனத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் அவதூறாக கருத்து தெரிவித்த அண்ணாமலை 10 நாட்களுக்குள் மன்னிப்புக் கோராவிட்டால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ட்விட் மூலம் பதிலளித்துள்ள அண்ணாமலை, தான் ஒரு சாதாரண விவசாயி அமைச்சர்களை போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.