நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல அல்லது ரூபாய் நோட்டின் ஓரம் கிழிந்திருந்தாலோ, டேப் போட்டிருந்தாலோ அல்லது இரண்டு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதை mutilated note என்று அதை வங்கியில் கொண்டு கொடுத்தால் அவர்கள் அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள்.
இந்நிலையில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் சேவையை அனைத்து பொதுமக்களுக்கும் வங்கிகள் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கணக்கு வைத்திருந்தால் மட்டுமே ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவோம் என்றும், கிழிந்த 500, 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு சில வங்கிக்கிளைகள் மறுப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. மேலும் பொதுமக்களுக்கு வங்கிக் கிளைகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.