Categories
தேசிய செய்திகள்

ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை பெற….. அருமையான திட்டம்….. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின்  காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர்.  இதன் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நம்பகத்தன்மை கொண்ட ஆபத்தில்லாத, அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலும் சேமிக்க தொடங்கினர்.

இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக பலன்களைத் தரக்கூடிய கிராமமான சுரக்ஷா திட்டம் பற்றி காண்போம்: இத்திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது உடையவர்கள் மட்டுமே இணைய முடியும் மேலும் இதில்sum insured அளவு 10,000 முதல் 10 லட்சம் வரை உள்ளது. இதில் நமக்கு தேவையான அளவிற்கு தேர்ந்தெடுத்து கொள்ளலாம் மற்றும் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் ,என்ற அடிப்படையில் மாதத் தொகையை செலுத்தி கொள்ளலாம்.

இத்திட்டத்தில் 19 வயதுடைய நபர் 10 லட்சம் என்றsum insured அளவீட்டை தேர்வு செய்கிறார் எனில்  மாதந்தோறும் 1515 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து அவரது 55-வது வயதில்31.60 லட்சம் வரை சேமிக்க முடியும். மேலும் இதிலிருந்து கூடுதலாக ஐந்து ஆண்டுகள் நீடித்த அதாவது 60 வயதில் 34.60 லட்சம் அதை சேமிக்க முடியும் இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |