திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட முட்டைகோஸ் பயிருக்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் பறிக்கப்படாமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் கூட விலை போகாத நிலையில் எடுப்பு கூலிக்கு கூட விலை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகள் முட்டைகோஸ் பயிர்களை எடுக்காமல் நிலத்திற்கு உரமாக விட்டு விட்டதாகவும், மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவதாகும் தெரிவித்தனர். மலை பகுதியில் விலையும் கேரட் மற்றும் முடைக்கோஸ் காய்களின் விலை ஆண்டுதோறும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பெறும் நஷ்ட்டத்தை சந்தித்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.