தமிழக அரசின் போக்குவரத்து கழகம் ரூ.42,500 கோடி கடனில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தான் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தினர். அதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போதும் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. மேலும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் நடத்துனர்கள் உடனே தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் இ-டிக்கெட் முறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்துக் கொண்டார்.