Categories
தேசிய செய்திகள்

ரூ.42,000 திருட்டு…. தோழியின் வீட்டிற்குச் சென்று… அவரது தாயின் ஏடிஎம் கார்டை திருடி… இளைஞர் செய்த காரியம்…!!!

இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழிக்கோட்டில் தங்கல் சாலை சாப்பாவில் அரபான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் மாதோட்டத்தை சேர்ந்த சிறுமியிடம் பழகியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் தாயுடன் பேசி விட்டு அங்கிருந்து ஏடிஎம் அட்டையை எடுத்து வந்துள்ளார். ஏடிஎம் வைக்கப்பட்டிருக்கும் கவருக்குள் ஏடிஎம் அட்டையின் பின் என்னும் இருந்ததால் அவருக்கு பணத்தைத் திருடுவது மிகவும் எளிமை ஆகிவிட்டது.

3 ஏடிஎம் சென்டர்களில் சென்று 42 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார். பிறகு மூன்று நாட்களுக்கு பிறகு அந்த அட்டையை சிறுமியின் வீட்டிற்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் வைத்துள்ளார். இதையடுத்து பணம் திருடு போனதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏடிஎம் கவுண்டர்களில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அரபான் பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |