Categories
மாநில செய்திகள்

ரூ. 4 கோடி மதிப்புள்ள… அரசு நிலம் மீட்பு… அரசு அதிரடி…!!!

காஞ்சிபுரத்தில் 4 கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு நிலங்கள் பலவற்றை மக்கள் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு வடக்கு மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புக்காக சிலர் பயன்படுத்தி வந்தனர்.

அதை அகற்ற முயன்றபோது, அப்பகுதி மக்கள், மாடுகளை அகற்றுவதற்கு கால அவகாசம் கேட்டனர். ஆனால் அதன்படி நடந்து கொள்ளவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 1.36 ஏக்கர் நிலம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 4 கோடி ஆகும். மேலும் ஆக்கிரமிப்புவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |