டெல்லியில் 360 கோடி ரூபாய் செலவில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது இந்த புதிய பிரதமர் இல்லம் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய நாடாளுமன்ற வளாகத்தோடு பிரதமர் இல்லம், புதிய குடியரசு துணை தலைவர் இல்லம் அமைக்கப்படும். அதற்கான ஒப்பந்தங்கள் பொதுப்பணித்துறைக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. தற்போது பிரதமர் இல்லம் 7, லோக் கல்யான் மார்க் என்ற முகவரியில் உள்ளது.
பிரதமரின் புதிய இல்லத்தின் சிறப்புகளை காண்போம்:
*புதிய நாடாளுமன்ற வளாகம் அருகே, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் இல்லங்கள் அமைவதால் சில நிமிடங்களிலேயே முக்கிய வளாகங்களுக்கு சென்றுவரலாம்.
*நாடாளுமன்ற வளாகம், பிரதமர் இல்லம், அலுவலகம், குடியரசுத் தலைவர் இல்லத்துக்கு சுரங்கப்பாதை அமைகிறது.
*பிரதமருக்கு பாதுகாப்பளிக்கும்பாதுகாப்பு படையினருக்கான முகாம்களும் அமைகின்றன.
* முக்கிய விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கவும் சிறப்பு வளாகம்.