இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தினால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதே மிகக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு ரூ.3000 கோடி நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இந்த நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த விட்ட நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கை ரூ.3000 கோடி வரை அமெரிக்க டாலர், யூரோ அல்லது இந்திய ரூபாய் மதிப்பில் எடுத்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.