Categories
தேசிய செய்திகள்

ரூ.250 போதும்… உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பாக பாதுகாக்கலாம்… இந்தத் திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

தபால் துறை நமக்கு பல்வேறு திட்டங்களை தருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வரை பல திட்டங்கள் நமக்கு கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் சில திட்டங்களை தபால் துறை நமக்கு அளிக்கின்றது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் செல்வ மகள் திட்டம் அல்லது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் .

பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 ரூபாய் இருந்தால் போதுமானது. உங்களால் 15 வருடங்கள் மட்டுமே இந்த தொகையை செலுத்த இயலும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு வட்டி விகிதம் கிடையாது. மாதந்தோறும் ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்

21 ஆண்டுகள் நிறைவடையும் போது  சுகன்யா சம்ரிதி யோஜனா முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும்.  மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 21 வயது ஆகும் போது உங்களது மகளுக்கு 5.9 லட்சம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் செலுத்திய தொகை 15 வருடங்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால் வட்டித் தொகை 3.29 லட்சம். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சேமித்தால் இறுதியில் 51 லட்சம் கிடைக்கும். செலுத்தும் தொகைக்கு ஏற்பது போல் உங்கள் மகளின் கைகளில் லட்சங்கள் கிடைக்கும். அவர்களின் எதிர்காலத்திற்கு இது நல்லதாக அமையும்.

Categories

Tech |