Categories
அரசியல் தமிழ் சினிமா

ரூ.225,00,00,000 வசூல்..! செம போடுபோட்ட சூப்பர் ஸ்டார்… கலக்கிய அண்ணாத்த …!!

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் உலகம் முழுக்க 13 நாட்களில் 225 கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை புரிந்துள்ளது.

ரஜினியோட நடிப்பில் 25 வருடம் கழித்து தீபாவளி அன்று ரிலீசான படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா ரஜினி கூட்டணியில் முதன்முறையாக இணைந்து எடுத்த படம் என்பதால் ரொம்ப எதிர்பார்ப்போட ரசிகர்கள் வெயிட் பண்ணி காத்துக்கொண்டிருந்த படம் என்று சொல்லலாம்.

விசுவாசம் படத்திற்குப் பின்னர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ்குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருந்தாங்க. வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இமான் மியூசிக் பண்ணியிருந்தார். அண்ணாத்த படம் உலகம் முழுக்க 300க்கும் அதிகமான தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1,100 தியேட்டர்களில் ரிலீஸாகி தமிழில் புதிய சாதனை படைத்திருக்கிறது. இன்றுவரை ரஜினி நடித்த 2.O படம்தான் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம். தற்போது அந்த சாதனையை கூட அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Categories

Tech |