Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000,00,00,00,000 மதிப்பிலான சிறப்பு நிதியுதவி – மோடி அதிரடி

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

Despite Historic First Address Amid Covid-19 Pandemic, PM Modi Has ...

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீடித்து அதிகாடியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சொல்லப்படுகின்றது.

Say no to panic, yes to precautions: PM Modi tweets on coronavirus ...

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுவதாக காலை பிரதமர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகின்றார். அதனையடுத்து பிரதமர் மோடி பேச தொடங்கியுள்ளார். கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுவது 5ஆவது முறையாகும். அதில் உலகை இந்தியா வழிநடத்த வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டு வந்து இருக்கின்றது.

 

 

மேலும், 4ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும் மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும். 4ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும். பொருளாதார சிக்கலை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு நிதியுதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |