செய்தியாளர்களிடம் பேசிய நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தினுடைய தலைவர், தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் நல்லாசியுடன், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவருடைய ஆதரவுடன், கரூர் மாநகராட்சி பகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற அண்ணன் திரு பழனிச்சாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கின்ற நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. 11-வார்டு களில் வாக்குகள் சேகரிக்க என்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வார்டுகளில் 42 வார்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
மீதம் இருக்கக்கூடிய வார்டுகளில் தோழமைக் கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கின்றன. நடைபெறுகின்ற நகர்புறத்தினுடைய உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கின்ற பொழுது, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இந்த எட்டு மாத காலத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி தந்திருக்கிறார்.
குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம். அதேபோல மகளிருக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர், ஆவின் பாலின் உடைய விற்பனை விலை குறைவு, பெட்ரோல் விலை குறைவு. இப்படி பல்வேறு சிறப்பு திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் நிறைவேற்றி தந்திருக்கிறார்கள்.
இல்லம் தேடி கல்வி. மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 ஒரு லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு என பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தந்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்திற்கு ஒரு அரசு வேளாண்மை கல்லூரி, அதேபோல கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய பேருந்து நிலையம், கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம், இரண்டு கதவனைகள் உட்பட தடுப்பணைகள் என 2000 கோடி அளவிற்கான வளர்ச்சித் திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார். சாதனைகளைச் சொல்லி வாக்குகளை சேகரிக்கிறோம். மக்களும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர் என தெரிவித்தார்.