தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய முழு விவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கணினி வழியாக தமிழ் மொழியை பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது.
இந்த வகையில் 2021 ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னதாக விருதுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31.12.2021 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு தற்போது கால அவகாசத்தை 28.02.2022 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விருதை பெறுபவருக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்க தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் அளிக்கப்படும்.