Categories
தேசிய செய்திகள்

ரூ. 20 கோடிக்கு டீல்…. ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை வாங்க பலே திட்டம்…. பாஜக மீது முதல்வர் கடும் சாடல்….!!!!

எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழக்க பாஜக திட்டமிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 53 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக குறி வைத்துள்ளது. நம்முடைய கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை ரூபாய் 20 கோடிக்கு பாஜக விலை பேச திட்டமிட்டுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை தங்கள் வசப்படுத்துவதற்கு பாஜகவுக்கு எங்கிருந்து காசு கிடைத்தது என்பதை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

அதன் பிறகு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் பாஜகவோ டெல்லி அரசு மதுபான ஊழலில் இருந்து தப்பிப்பதற்காக பாஜக மீது குறை கூறுவதாக கூறியுள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு காந்தி சமாதிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |