லண்டனை சேர்ந்த ஒருவர் தனது காரில் நீண்ட காலமாக கிடந்த ஸ்பூன் ஒன்றை ஏலத்திற்கு விட்டுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தைப் பற்றி இதில் பார்ப்போம்.
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனது காரில் நீண்ட வருடமாக, நெளிந்து கிடந்த பழைய ஸ்பூன் ஒன்றை கண்டு இது மிகவும் வித்தியாசமாக உள்ளது என எண்ணி அதை லாரன்சஸஸ் ஏல மையத்திற்கு சென்று இந்த ஸ்பூனை ஏலத்திற்கு விட அதை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்படி 5 இன்ச் நீளம் கொண்ட அந்த ஸ்பூன் வெள்ளியால் ஆனது எனவும், 13ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஸ்பூனை ஏலத்திற்கு விட்ட பிறகு அது ரூ51,712 க்கு பட்டியலிடப்பட்டது. இந்த ஸ்பூனை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவிய காரணத்தினால், இறுதியாக அந்த ஸ்பூன் 2 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த செய்தி சமூக வைரலாகி வருகிறது. கருப்பாக நெழிந்து இருக்கும் அந்த ஸ்பூன் இரண்டு லட்சத்திற்கு ஏலம் போனதால் அதன் உரிமையாளர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.