கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் 2 ரூபாய் மதிப்புள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. ஒரு பாக்கெட்டில் 20 ஆயிரம் ரூபாய் வரை 500 ரூபாய் நோட்டுகளாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் போட்டி போட்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் 30,000 சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
இதனால் கிராமத்தில் உள்ள அனைத்து சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்தால் மீண்டும் புதிதாக சிப்ஸ் பாக்கெட்டுகள் வந்துள்ளது. ஆனால் புதிதாக வந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் ஏதும் இல்லாததால் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மேலும் தங்கள் நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகளை பிரபலப்படுத்துவதற்காக சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.