திருவாரூரில் வெங்காயம் மற்றும் நாட்டுக் காய்கறிகளின் வரத்து குறைந்தது விலைவாசி குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூரில் கடந்த 5 நாட்களாக நாளுக்குநாள் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இல்லத்தரசிகளிடம் காய்கறிகள் வாங்கி கொடுக்க முடியாமல் இல்லத்தரசர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகள் வரத்து குறைந்ததே விலை வாசிகளின் உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிய வெங்காயம் கிலோ 50 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்ய பட்டு வந்த நிலையில் இன்று 120 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நாட்டுக் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதால் வியாபாரம் மந்தம் அடைந்துள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர் .